80,000-க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள்! துறவிகளை மிரட்டி ரூ. 88 கோடி பணம் பறித்த தாய்லாந்து பெண்!
தாய்லாந்தில் துறவிகளுடன்(Monk) பாலியல் உறவு வைத்துக் கொண்டு, அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி பணம் பறித்ததாக கூறப்படும் ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
"Ms. Golf" என்று காவல்துறையினரால் அழைக்கப்படும் அந்தப் பெண், குறைந்தது ஒன்பது துறவிகளுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 385 மில்லியன் பாட் (இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய்) வரை அவர் பணம் பறித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்தப் பெண்னின் வீட்டை சோதனை செய்த விசாரணையாளர்கள், துறவிகளை மிரட்டப் பயன்படுத்தப்பட்ட 80,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கண்டுபிடித்துள்ளனர் என்று காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சமீபத்திய ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் மிகவும் மதிக்கப்படும் பௌத்த நிறுவனத்தில் நடந்த இந்தச் சமீபத்திய நிகழ்வு, மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |