விசா இல்லாமல் தங்கும் காலத்தை குறைத்த ஆசிய நாடு
பிரபல ஆசிய நாடொன்றில், சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தங்கும் காலத்தை 30 நாட்களாக குறைக்கப்படுகிறது.
தாய்லாந்து அரசு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா தங்கும் (visa-free stay) காலத்தை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கும் புதிய தீர்மானத்தை அறிவித்துள்ளது
தாய்லந்தில் சட்டவிரோத தொழில் மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாய்லாந்து சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சர் சொரவோங் தியன்தாங் இந்த மாற்றம் குறித்து பல அமைச்சுகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
93 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு
இந்த புதிய விதிமுறையால் 93 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்துள்ள சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவர்.
சுற்றுலா முகவர்களின் சங்கம் மற்றும் தாய்லாந்து ஹோட்டல் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட விசா இல்லா தங்கும் காலம் சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டவர்கள் தங்கும் கொண்டோமினியம் வீடுகள் சட்டவிரோதமாக வாடகைக்கு விடப்படுவது கூடுதலாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள் எப்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
சில சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாக டிஜிட்டல் நோமேட்கள், ஓய்வுபெற்றவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் விடுமுறை செலவிடுபவர்கள், இந்த மாற்றம் சிரமமாக அமையலாம்.
சுற்றுலாத் துறை தாய்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார ஆதாரமாக உள்ளது. 2025-ஆம் ஆண்டில் 40 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு இலக்கு வைத்துள்ளது.
2024 மார்ச் 9 வரை, 7.66 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் தாய்லாந்திற்கு வந்துள்ளனர், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.4% அதிகம்.
இந்த புதிய கட்டுப்பாடு, தாய்லாந்தில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான சட்டவிரோத வழிகளை தடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |