தாய்லாந்து நிலநடுக்கம் - சாலையின் நடுவே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்
தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை பாதிக்கப்பட்டதையடுத்து பெண் ஒருவர் சாலையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
மியான்மர் தாய்லாந்து நடுக்கம்
ஆசிய நாடான மியான்மரில் நேற்று 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
இதில் பல கட்டிட்டங்கள் சரிந்து விழுந்து, மியான்மர் இதுவரையில் இல்லாத கடும் சேதத்தை சந்தித்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் தாக்கம் நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள தாய்லாந்து, வங்கதேசம், இந்தியாவின் சில மாநிலங்களிலும் எதிரொலித்தது.
இதில், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அங்கும் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
#Breaking
— Pioneer @PiNetwork (@emarjmanere) March 28, 2025
A building in Bangkok (Chatuchak District), #Thailand has collapsed due to the massive earthquake in #Myanmar. The building is under construction when it collapsed.
Myanmar was hit by a Magnitude 7.7 Earthquake followed by an aftershock of Magnitude of 6.4 pic.twitter.com/okOvhEqAD4
சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்
இந்நிலையில் பாங்காங்கில் உள்ள பொலிஸ் மருத்துவமனை ஒன்றில் நிலஅதிர்வு உணரப்பட்டதையடுத்து, அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், பாதுகாப்பாக திறந்தவெளிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு, சாலையில் வைத்தே மருத்துவக்குழுவினர் பிரசவம் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Footage during the earthquake in #Bangkok a baby was born in the park 😭 Waht a story to tell ‘’ I was born during the earthquake ‘’ #แผ่นดินไหว #earthquake #myanmarearthquake #bangkokearthquake #ตึกถล่ม pic.twitter.com/7E0FdzfPEf
— Miia 🩵 (@i30199) March 28, 2025
இந்த வீடியோவில், சாலையில், கர்ப்பிணி பெண் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்க அவரை மருத்துவமனை ஊழியர்கள் சூழ்ந்து நின்று பிரசவம் பார்க்கின்றனர்.
பிரசவத்திற்கு பின்னர், தாய் மற்றும் குழந்தை நலமாக உள்ளதை மருத்துவமனை ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |