முழு வௌவாலை சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட பெண்! அதிர்ச்சியடைந்த மக்கள்.. ஐந்து ஆண்டுகள் சிறை
வௌவாலின் உமிழ்நீர், இரத்தம் மற்றும் தோலைத் தொடுவது ஆபத்து என்று கருதப்படுகிறது
நிபுணர்களின் கூற்றுப்படி வௌவால்கள் 10,000க்கும் மேற்பட்ட வைரஸ்களை எடுத்துச் செல்வதால், அவை மனிதர்களுக்கு பரவி மற்றோரு தொற்றுநோயை உருவாக்குகின்றன
தாய்லாந்து வலைப்பதிவாளர் ஒருவர் முழு வௌவாலை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டதால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் Phonchanok Srisunaklua. வலைப்பதிவாளராக செயல்பட்டு வரும் இவர், தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், சூப் கிண்ணத்தில் முழு வௌவாலை வைத்து அவர் சாப்பிடுகிறார். ஒரு நிமிடம், 40 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வௌவால்கள் சுவையானவை என்று வர்ணிக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அச்சமடைந்து புகார் தெரிவித்தனர். வௌவால்களை உண்பதால் நோய் பரவல் அச்சம் உள்ளதால் இணையவாசிகள் அப்பெண்ணை திட்டித் தீர்த்தனர்.
மேலும், புகார்களின் அடிப்படையில் குறித்த பெண் ஒரு தொற்றுநோயைத் தொடங்கும் அபாயத்தை ஏற்படுத்தியதால் அவர் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.
ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை Phonchanok Srisunaklua மறுத்தார். பின்னர் சமூகம், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரிடம் மன்னிப்பு கேட்கும் மற்றோரு வீடியோவை வெளியிட்டதுடன், இனி வௌவால்களை சாப்பிட மாட்டேன் என்றும் கூறினார்.
ViralPress
ViralPress