2 லட்சம் பயணிகளுக்கு இலவச விமான பயணம் அறிவித்துள்ள ஆசிய நாடு
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது தாய்லாந்து.
இந்தியா, இலங்கை உட்பட 93 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத வருகையை தாய்லாந்து வழங்கியுள்ளது.
இலவச உள்நாட்டு விமான பயணம்
இந்நிலையில், சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், இலவச உள்நாட்டு விமான பயணத்திற்கு நிதி உதவி வழங்க தாய்லாந்து முன்வந்துள்ளது.
தாய்லாந்தின் விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், "Buy International, Free Thailand Domestic Flights" என்ற திட்டத்தின் கீழ் 700 மில்லியன் TBH(இந்திய மதிப்பில் சுமார் ரூ.187 கோடி) ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தில், தாய் ஏர்வேஸ், பாங்காங் ஏர்வேஸ், தாய் ஏர் ஆசியா, நோக் ஏர், தாய் லயன் ஏர், தாய் வியட்ஜெட் ஆகிய 6 விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன.
இதன்படி, இந்த 6 விமான நிறுவனங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து தாய்லாந்திற்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு, உள்நாட்டு விமான பயணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்காக ஒரு வழி விமான பயணத்திற்கு 1750 TBH மற்றும் இரு வழி பயணத்திற்கு 3500 TBHவழங்குகிறது.
[4Y1B9
செப்டம்பர் 2025 தொடங்கி நவம்பர் 2025 வரை இந்த திட்டத்தில், 2 லட்சம் சுற்றுலா பயணிகள் இலவச உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளலாம்.
முன்னதாக ஜப்பானும் சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், இந்த இலவச உள்நாட்டு விமான பயண திட்டத்தை அறிவித்தது.
அதேவேளையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதி விலையில் விமான டிக்கெட் வழங்கி வருகிறது. இதில் முக்கிய நகரங்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நிரம்பி விட்டது.
இரண்டாம் நிலை நகரங்களில் சுமார் 54,075 டிக்கெட்கள் உள்ளது. இவை செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக முன்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |