பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படத்தால் தாய்லாந்து பிரதமருக்கு நேர்ந்த கதி
முகக் கவசம் அணியாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்ட தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாததற்காக தாய்லாந்தின் பிரதமர் Prayuth Chan-ocha-வுக்கு பாங்காக் மாநகராட்சி 6000 பாட் (137 பவுண்ட்) அபராதம் விதித்தது.
ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை Prayuth Chan-ocha பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் பிரதமர் முகக் கவசம் அணியாமல் இருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது விதிமீறல் என நான் பிரதமருக்கு தகவல் தெரிவித்தேன் என்று பாங்காக் ஆளுநர் Aswin Kwanmuang தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் பின்னர் பேஸ்புக்கிலிருந்து பிரதமரின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் நகர சபையில் விசாரித்தார், பாங்காக் நகரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டின் படி, வீட்டுக்கு வெளியே மக்கள் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
இதன் அடிப்படையில் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என Kwanmuang கூறினார்.