சிங்கப்பூர் ஜனாதிபதியாக பூர்வீக தமிழர் தர்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்பு
பூர்வீகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
அபார வெற்றி
சிங்கப்பூரின் முதல் பெண் ஜனாதிபதியான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் இந்த மாதம் 1ம் திகதி நடைபெற்றது.
இதில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட தர்மன் சண்முகரத்னம் போட்டியிட்டு மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 சதவீத வாக்குகளை பெற்று சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ROSLAN RAHMAN/AFP via Getty Images
இந்நிலையில் 154 ஆண்டுகள் பழமையான இஸ்தானா மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், கேபினட் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Xinhua/Then Chih Wey
தர்மன் சண்முகரத்னம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் ஜனாதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |