குடும்பத் தகராறு! மனைவியின் கைவிரலை கடித்து தின்ற கணவன்
குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கைவிரலை கடித்து தின்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைவிரலை கடித்து தின்ற கணவன்
இந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்குமார் (45), புஷ்பா(40). இவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மகன் பிறந்து சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்பு புஷ்பா, தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி விஜயகுமார், புஷ்பாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்பு, இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து கைகலப்பில் ஏற்பட்டுள்ளது.
அப்போது, விஜயகுமார் ஒரு கட்டத்திற்கு மேல் மனைவியின் இடது கை விரலை தனது வாயில் வைத்துள்ளார். பின்னர், ஆத்திரமடைந்து வாயில் வைத்தே விரலை கடித்து மென்று தின்றதாக கூறப்படுகிறது.
கணவர் கைது
இதனையடுத்து, கை விரலின் வலியால் துடித்த புஷ்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை முடிந்த பிறகு புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது கணவன் எனது கை விரலை கடித்து மென்று தின்றுவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |