இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் மூளையாக செயல்படும் நபர் இவர்தான்...
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துவக்கிய திடீர்த் தாக்குதல் உலகை பரபரப்படையச் செய்துள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் மூளையாக செயல்படும் நபர் இவர்தான்...
கடந்த சனிக்கிழமை காலை திடீரென இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துவக்கிய தாக்குதல் உலகை பரபரப்படையச் செய்துள்ள நிலையில், அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர், ஏழு கொலை முயற்சிகளில் தப்பியவர் என்றும், புதிய ஒசாமா பின் லேடன் என அழைக்கப்படுபவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Getty Images
பல ஆண்டுகளாக இஸ்ரேலால் தேடப்பட்டுவருபவரான அவரது பெயர் Mohammed Deif (58). கொலைமுயற்சிகளின் விளைவாக இரண்டு கைகளையும் கால்களையும், ஒரு கண்ணையும் இழந்த Deif, நிரந்தரமாக சக்கர நாற்காலியிலேயே வலம்வருவதாக கூறப்படுகிறது.
காசாவில் தரைக்குக் கீழ் அமைந்துள்ள சுரங்கங்களில் மறைந்து வாழ்ந்துவரும், அல்லது அடிக்கடி தான் தங்குமிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் Deifஉடைய ஒரே ஒரு புகைப்படம்தான் இதுவரை வெளியாகியுள்ளது.
அகதிகள் முகாமில் பிறந்தவர்
அகதிகள் முகாமில் பிறந்த அவர், தனது பெயரை Deif என மாற்றிக்கொண்டாராம். Deif என்பதற்கு அதிதி அல்லது விருந்தினர் என்று பொருள். அதாவது, தான் நிரந்தரமாக ஓரு வீட்டில் தங்குவதில்லை என்னும் பொருளில் அவர் அந்த பெயரை வைத்துக்கொண்டுள்ளார்.
அவரது இயற்பெயர், Mohammed Diab Ibrahim al-Masri. 1965ஆம் ஆண்டு காசாவில் பிறந்தவர் இந்த Deif.
X/@salosymposium
ஹமாஸின் ராணுவப் பிரிவான al-Qassam brigadesஇன் தளபதி என்ற முறையில், தனது வீரர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து கொல்வதையும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துவதையும் வீடியோவாக பதிவு செய்து அந்த காட்சிகளை வெளியிட்டுள்ளார் Deif.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, சுவர்களை அழியுங்கள் என பாலஸ்தீனர்களை வலியுறுத்தியுள்ளார் அவர்.
அத்துடன், பிற நாடுகளில் தங்களை பின்தொடர்வோரையும், போரில் கலந்துகொள்ளுமாறு Deif அழைப்பு விடுத்துள்ளதால், பல நாட்டவர்கள் இணைந்து வன்முறையில் ஈடுபடும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |