ஆவிகளுடன் பேசும் பலகையை வைத்து விளையாடிய மாணவிகள்: 28 மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்...
பள்ளி ஒன்றில், ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் பலகை ஒன்றை வைத்து விளையாடிய 28 மாணவிகளுக்கு தலைசுற்றல், மயக்கம் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் பலகையை வைத்து விளையாடிய மாணவிகள்
கொலம்பியாவிலுள்ள Galeras என்னுமிடத்தில் அமைந்துள்ளது Galeras Educational Institution என்னும் பள்ளி. அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் ஓய்ஜா பலகை என்னும் பலகையை வைத்து விளையாடியிருக்கிறார்கள்.
Image: Jam Press
அதைத் தொடர்ந்து, சுமார் 28 மாணவிகளுக்கு தலைசுற்றல் மற்றும் மயக்கம் முதலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
பள்ளியின் முதல்வரான Hugo Torres, அந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களிடமிருந்து அவர்களைக் குறித்த விவரங்களைப் பெறுவதற்காக தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Image: Jam Press
Image: Getty