தமிழர்கள் வீழ்ந்தது போல் பாலஸ்தீனர்கள் வீழ்கின்றனர்.., இலங்கையில் ஜனநாயகம் இல்லை: சீமானின் பேச்சு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவகாரத்தில் இலங்கையில் ஜனநாயகம் இல்லை என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகம்
பட்டியலின அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் கருங்கல்பாளையம் பொலிஸார் பதிவு செய்த வழக்கின் விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய புலனாய்வு துறைகளை வைத்து மாநில அரசுகளை பாஜக அச்சுறுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறியது சரிதான். திமுக அமைச்சர்களிடத்தில் மட்டும் சோதனை நடத்தி அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடு நடைபெறவில்லை என காட்டுவதற்கு முயல்கிறதா?
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது மூலம் இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பது வெளிப்படையாக உறுதியாகியுள்ளது" என்றார்.
விஜயின் அரசியல்
மேலும் பேசிய அவர், "நடிகர் விஜய் நிச்சயம் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவார். பின்பு, நடிப்பதை நிறுத்திக் கொள்வார். அதன் பின் எங்களுடைய ஆலோசனைகளை முன்வைப்போம்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரானது மீண்டும் இலங்கை போரை நினைவூட்டுகிறது. இலங்கையில் தமிழர்கள் வீழ்ந்தது போல் பாலஸ்தீனர்கள் வீழ்கின்றனர்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |