பிரான்சில் Louis Vuitton கடையில் காரை மோதி திருடர்கள் கொள்ளை
பிரான்சில் விலை உயர்ந்த கைப்பைகளை திருடுவதற்காக லூயிஸ் உய்ட்டன் (Louis Vuitton) கடைக்குள் திருடர்கள் காரை அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த ஆண்டு இரண்டாவது முறையாக டிசைனர் கைப்பைகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை திருடுவதற்காக திருடர்கள் இன்று பிரெஞ்சு லூயிஸ் உய்ட்டன் எனும் உலகப்ப உகழ்பெற்ற ஆடம்பர பொருட்களின் கடையின் கதவுகளை காரை கொண்டுவந்து மோதி உடைத்துள்ளனர்.
வடகிழக்கு பிரான்சில் லில்லியின் மையத்தில் உள்ள இந்த லூயிஸ் உய்ட்டன் ஆடம்பர பொருட்களின் கடை ஏற்கனவே ஜனவரியில் ரூ திருட்டு கும்பலால் குறிவைக்கப்பட்டது. அப்போது அந்த கும்பல் பெரும்பாலான பொருட்களை திருடிச்சென்றன.
Radio France - Louise-Adélaïde Boisnard
ஆனால் அவர்களால் அந்த தெருவைக்கூட தாண்ட முடியவில்லை, பொலிஸார் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
அதையடுத்து, இப்போது மீண்டும் இன்று விடியற்காலையில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜனவரியில் நடந்தது போல் மாட்டிக்கொள்ளாமல் தடுக்க, மதிப்புமிக்க ஆர்ட் டெகோ கட்டிடத்தின் முன் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பொல்லார்டு தடுப்புகளை திருடர்கள் தவிர்த்துவிட்டு திருடர்கள் தப்பிச் சென்றனர்.
Florent Moreau lavoixdunord.fr
பிரான்சின் மிகப்பெரிய செல்வந்தரான பெர்னார்ட் அர்னால்ட்க்கு (Bernard Arnault) சொந்தமான இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பு குறித்து பொலிஸார் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
லில்லி நகரத்தின் மேயர், மார்டின் ஆப்ரி, கடையின் வளாகத்தைப் பாதுகாப்பதற்காக புதிய தடைகளை உருவாக்கப்படும் என்று கூறினார், அதே நேரத்தில் நிறுவனத்தின் நிர்வாகம் கட்டிடத்திற்குள் ஒரு தடையை நிறுவுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
Florent Moreau lavoixdunord.fr
© BFM Grand Lille
© BFM Grand Lille