100 ஆண்டுகளை கடந்தும் காவு வாங்கிய டைட்டானிக்!
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் மாயமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல்
கடந்த 1912ம் ஆண்டு கனடா அருகே அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில் இருந்த பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியது. இக்கப்பலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஆழ்கடலில் மூழ்கியுள்ள இந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிட சாகச சுற்றுலாவை ஏற்பாடு செய்தது.
இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வர்கள் சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்மூழ்கி கப்பலின் தகவல் இணைப்பு திடீரென்று துண்டாகி 5 பேருடன் அந்தக் கப்பல் மாயமானது.
இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவு வாங்கிய டைட்டானிக்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் பலர் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கி கப்பலின் மேல்பகுதி உள்ளிருந்து திறக்கவே முடியாதாம். அந்தக் கப்பல் கரைக்கு வந்ததும் யாராவது திறந்து விட்டால்தான் திறக்குமாம். இந்தக் கப்பல் குறுகலான இடத்தை கொண்டிருக்குமாம்.
உள்ளே இருப்பவர்கள் காலை மடக்கிக்கொண்டு தான் அமர்ந்து செல்ல வேண்டும். இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் பெரிய ரிஸ்ட்டை அந்த கோடீஸ்வரர்கள் எடுத்தார்கள் என்று சமூகவலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்தை கூட திகில் படமாக எடுப்பார் என்றும், ஒருவேளை டைட்டானிக் கப்பலில் இறந்த ஆன்மா காவு வாங்கி விட்டதா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
This is what happened to the #titanicsubmarine as its imploded on decent. Death was instant.
— Khaleed (@afayeed254) June 22, 2023
They didn't even know it happened.
They didn't even reach the #Titanic.
May their souls rest in peace.
Pray for the families ?#submarinemissing #OceanGateSub #titanicsub pic.twitter.com/tTtroJvU9d
The ghosts of the titanic watching the submarine arrive pic.twitter.com/zT0J6DeSH5
— Avid ( Fan Account ) (@new_avid) June 23, 2023