நொடியில் மரணம்., டைட்டன் நீர்முழ்கி கப்பல் இப்படித்தான் வெடித்திருக்கும்! வைரலாகும் வீடியோக்கள்
டைட்டன் நீர்முழ்கி கப்பல் எப்படி வெடித்திருக்கும் என்பதைக் காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
அழுத்தம் தாங்காமல் உள்நோக்கி வெடித்திருக்கலாம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) முதல் காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலின் அழுத்தம் தாங்காமல் உள்நோக்கி வெடித்திருக்கலாம் (implosion) என நம்பப்படுகிறது.
1912-ஆம் ஆண்டு ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி அட்லாண்டிக் கடலில் மூழ்கிய, டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் இந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
PHOTO: ALAMY STOCK PHOTO
இந்த விபத்தில், டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதில் பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான்-பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலேமான் தாவூத், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் துணை இயக்குனரான OceanGate Expeditions-ன் CEO ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் இவர்கள் அனைவரும் ஒரு நொடியில் இறந்திருக்கலாம் என்று அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்மையில் என்ன நடந்திருக்கும், விபத்து நடந்திருந்தால் அது எப்படி நடந்திருக்கும் என அறிந்துகொள்ள டைட்டன் நீர்முழ்கி கப்பலின் பாகங்களை சில மீட்பு பணியாளர்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
இதனிடையே, காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் சாத்தியக்கூறு பற்றிய அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி ரியர் அட்மிரல் ஜான் மாகர், இதுவரை கண்டெடுக்கப்பட்ட நீர்முழ்கி கப்பலின் பாகங்கள், அழுத்தத்தால் ஏற்படும் வெடிப்புடன் ஒத்துப்போகின்றன என்று கூறியுள்ளார்.
? Breaking News
— WOLF™️ (@thepakwolf) June 22, 2023
All five people onboard on #Submersible are all very sadly died, #OceanGate confirms. This video shows how the accident happened with the submarine. ?#Titanic #Titan pic.twitter.com/W82X9OawuD
"கப்பல் எப்போது அல்லது ஏன் வெடித்தது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை, நாங்கள் எங்களால் முடிந்தவரை தகவல்களை சேகரிப்போம்" என்று அவர் கூறினார்.
அதற்குள், டைட்டன் நீர்முழ்கி கப்பல் இப்படிதான் வெடித்திருக்கும் என்பதைக் காட்டும் வகையிலான சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அவற்றை கீழே காணலாம்
Scary as fuck ?
— Titanic Countdown (@TitanCountdown) June 23, 2023
The implosion in the Titan sub looked like this.#implosion #OceanGate #Titan #titanicsubmarine #OceansGate #submarine #titanicsubmersible #titanicsub #TitanicRescue #Titanic #submarinemissing #TitanicRescue simpson flamengo#NBADraft2023 pic.twitter.com/FDlFoF4wFt
Credit to @ sincerelybootz on TikTok
— ⚡Publicly Buzzed⚡ (@PubliclyBuzzed) June 22, 2023
Haunting spectacle of an implosion. Still Best Case Scenario
#implosion #Titan #titanicsubmarine #TitanSub pic.twitter.com/C6PTtX6fwr
Here’s an example of what the implosion of the Titan submersible would have looked like. Potentially even more violent given the depths of the mission. #Titan #Titanic #OceanGate #implosion #submarine #submarinemissing pic.twitter.com/1hZTjlxOMg
— Messias (@honestfan_1) June 23, 2023
To put the submarine implosion into perspective.. #submarine #titan #titanic #oceangate pic.twitter.com/SW7GpEKJ7M
— wolf (@nomanners21) June 22, 2023
Titanic Sub, US Coast Guard, What is implosion, OceanGate Titan sub
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |