கடலுக்குள் இருந்து சத்தங்கள் கேட்கிறது! நீர்மூழ்கி கப்பலை தேடும் கடலோர காவல்படை தகவல்
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடலுக்குள் இருந்து சத்தங்கள் கேட்டதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
தேடும் பணியில் தொய்வு
கடலுக்குள் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அட்லாண்டிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது.
இதில் பிரித்தானிய பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கி கப்பல் பைலட் பால்-ஹென்றி நர்கோலெட் மற்றும் ஓபன் கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டான் ரஷ் என மொத்தம் 5 பேர் பயணத்த நிலையில், நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்கும் பணி அமெரிக்க கடலோர காவல் படை மற்றும் பல தனியார் ரோந்து அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Pic: US Coast Guard
அமெரிக்க கடலோர காவல் படையின் கேப்டன் ஜேமி பிரடெரிக் நேற்று வழங்கிய தகவலில், காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 5 பேருக்கும் இன்னும் 40 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே மீதம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
கேட்கப்பட்ட சத்தம்
இந்நிலையில் கடலுக்குள் இருந்து இன்று அதிகாலையும், நேற்றும் சத்தங்கள்(noises) கேட்டு இருப்பதாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கும் அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
The Victor 6000(Sky News)
இது தொடர்பாக கேப்டன் ஜேமி பிரடெரிக் வழங்கியுள்ள தகவலில், நேற்றும் இன்று காலையும் கனடியன் P3 மூலம் இந்த சத்தங்கள் கேட்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பல்வேறு சத்தங்கள் இருப்பதாகவும், கடல் மிகவும் சிக்கலான இடம் என்றும் நிபுணர் ஒருவர் விவரித்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு சத்தங்களும் தனியாக தனியாக பகுக்கப்பட்டு, கண்காணித்து அதற்கான வடிவங்கள் உற்றுநோக்க படுவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |