ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தமிழன்!
ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்த தமிழர்வெங்கடேசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்
இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 278 பேர் பலியாகினர். இந்த கோர விபத்தில் 177 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 101 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயிலில் பயணித்த தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் வெங்கடேசன், மீட்புப்பணியில் ஈடுபட்டதுடன் உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, மீட்புப்பணியின்போது களத்தில் நின்று நிலவரத்தை வீடியோவாக அவர் எடுத்து வெளியிட்டார்.
தமிழக முதல்வர் பாராட்டு
இந்நிலையில், மீட்புப்படை வீரர் வெங்கடேசனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள்.
உரிய நேரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும், விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
#OdishaTrainAccident-இல் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள்.
— M.K.Stalin (@mkstalin) June 6, 2023
உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால்… https://t.co/EizFt742iK