ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PhD படிப்பு: தமிழக மாணவி அடைந்த ஏமாற்றம்!
தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமி பாலகிருஷ்ணன் என்ற மாணவி ரூ.1 கோடி வரை செலவு செய்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PhD படித்து வந்த நிலையில், அவர் PhD படிப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவிக்கு நேர்ந்த ஏமாற்றம்
உலகின் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி பாலகிருஷ்ணன் என்ற மாணவி, இந்த பல்கலைக்கழகத்தில் PhD படிப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
1000 டன் வெடிக்கும் பொருள்..!ரஷ்யாவின் மிதக்கும் வெடிகுண்டு பிரித்தானிய துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு
லட்சுமி பாலகிருஷ்ணன், இந்தியாவில் இரண்டு முதுகலை பட்டப்படிப்புகளை முடித்து, வில்லியம் ஷேக்ஸ்பியர் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் PhD படிப்பில் சேர்ந்துள்ளார்.
ஆனால், படிப்பின் நான்காம் ஆண்டில் திடீரென அவரது படிப்பு நிறுத்தப்பட்டு, முதுகலை படிப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரூ.1 கோடி வரை செலவிட்ட மாணவி
லட்சுமி பாலகிருஷ்ணன், PhD படிப்பிற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை செலவிட்டதாகவும், தனது விருப்பத்திற்கு எதிராக படிப்பு நிறுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் விளக்கம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தங்கள் அறிக்கையில், ஆய்வு மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான கல்வி செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றும், லட்சுமி பாலகிருஷ்ணனுக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |