மலையுச்சியில் பணப்பெட்டி கொள்ளை (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் உள்ள அரசு பள்ளிகளில் இனி முஸ்லிம் பெண் பிள்ளைகள் அபாயா(ஹிஜாப்) அணிய தடை விதிப்பதாக அந்த நாட்டின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிலவுக்கு அனுப்ப முயன்ற விண்கலத்தின் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில், 2,350 மீற்றர் உயர மலையில் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டி ஒன்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய எல்லைக்கு அருகே பறந்த இரண்டு உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |