எந்த அறிகுறியும் இல்லை... மாயமான சிறுவன் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்த தகவல்
பிரான்சில் சிறுவன் தொடர்பில் எந்த அறிகுறியும் தென்படவில்லை என குறிப்பிட்டு, பொலிசார் தேடுதல் நடவடிக்கையை கைவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்வது பயன் தராது
கடந்த சனிக்கிழமை இரண்டரை வயதான Émile என்ற சிறுவன் திடீரென்று காணாமல் போனான். தாத்தா பாட்டியுடன் அவர்களது குடியிருப்பில் தங்கியிருந்த சிறுவன் மாயமான நிலையில், நான்கு நாட்களுக்கு பின்னர் தேடுதல் நடவடிக்கையை கைவிடுவதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
Shutterstock
மாயமான சிறுவன் தொடர்பில் எந்த அடையாளமும் தென்படாத நிலையில், தேடுதல் நடவடிக்கையை தொடர்வது பயன் தராது என்றே நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், பொலிஸ் விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவன் Émile எதிர்பாராத வகையில் கார் மோதி அல்லது டிராக்டர் மோதி கொல்லப்பட்டிருக்கலாம், அந்த வாகன சாரதி சிறுவனின் சடலத்தை ரகசியமாக மறைவு செய்திருக்கலாம் என கூறுகின்றனர்.
Shutterstock
சிறுவன் கொல்லப்படவோ, கடத்தப்படவோ, அல்லது விபத்தில் சிக்கவோ வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள அதிகாரிகள், அனைத்து வாய்ப்புகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |