உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது?
உலகளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், அமெரிக்கா டாப் 10 இடங்களில் வரவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசா இல்லாமல் பயணிக்க
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் தரவரிசை, அந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை விசா இல்லாமல் பயணிக்க அனுமதிப்பதைப் பொறுத்து அமைகிறது.
அதன்படி The Henley Passport Index, 2025யில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உலகின் சக்திவாய்ந்த இரண்டு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் டாப் 10 வரிசையில் வரவில்லை.
மேலும் இந்த பாஸ்போர்ட் தரவரிசை சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், அதன் சுற்றுலாப் பயணிகளை விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கின்றன.
டாப் 10 நாடுகள்
- சிங்கப்பூர்
- ஜப்பான் மற்றும் தென் கொரியா
- பின்லாந்து, டென்மார்க், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின்
- சுவீடன், அவுஸ்திரியா, போர்த்துக்கல், பெல்ஜியம், நோர்வே, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து
- சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கிரீஸ்
- பிரித்தானியா
- போலந்து, அவுஸ்திரேலியா, மால்டா, செக்கியா மற்றும் ஹங்கேரி
- கனடா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்தோனியா
- சுலோவேனியா, குரோஷியா, சுலோவாகியா மற்றும் லாத்வியா
- ஐஸ்லாந்து, லிதுவேனியா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |