உலகின் Top 10 பணக்கார நகரங்கள்: முதலிடத்தைப் பிடித்துள்ள நகரம்
உலகின் Top 10 பணக்கார நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில், நியூயார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முதலிடத்தைப் பிடித்துள்ள நியூயார்க்
உலகின் Top 10 பணக்கார நகரங்கள் பட்டியல் நியூயார்க் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அந்நகரில் 349,500 மில்லியனர்களும் 60 பில்லியனர்களும் வாழ்கிறார்களாம்.
Henley & Partners என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில், நியூயார்க்கின் மில்லியனர்கள் எண்ணிக்கை 48 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நகரம், சான் பிரான்சிஸ்கோ. அங்கு 305,700 மில்லியனர்களும் 68 பில்லியனர்களும் வாழ்கிறார்களாம்.
மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள டோக்யோவிலோ, மில்லியனர்கள் எண்ணிக்கை 5 சதவிகிதம் குறைந்து, 298,300 ஆகிவிட்டதாம்.
பட்டியலில் நான்காம் இடம் சிங்கப்பூருக்கு, ஐந்தாம் இடம், லண்டனுக்கு, 10ஆம் இடம் பீஜிங்கிற்கு!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |