கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட கிரிக்கெட் வீரர்கள்., Top10 பட்டியல் இதோ
2024-ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு விளையாட்டு மற்றும் பல நாடுகளில் கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது.
இது ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டொலர்களில் வருவாயை ஈட்டுகிறது. இந்தக் கிரிக்கெட் உலகில் வீரர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது.
2024-ஆம் ஆண்டில் உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள்:
1. ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist)
ஆடம் கில்கிறிஸ்ட் 2024-ஆம் ஆண்டில் 380 மில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக உள்ளார். இலங்கை பணமதிப்பின்படி ரூ.11,663 கோடி ஆகும்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான கில்கிறிஸ்ட் Australian Men’s Cricket Team-ன் கேப்டனாக இருந்தார் மற்றும் மூன்று உலகக் கோப்பைகளை வென்றுள்ளார் (1999, 2003, 2007).
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்ற இவர், தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
2. சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)
Master Blaster அன்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு $170 மில்லியன். இலங்கை பணமதிப்பின்படி ரூ.5,218 கோடி ஆகும்.
India national cricket team ஜாம்பவான் சச்சின் தனது தொழில்நுட்ப புத்திசாலித்தனத்திற்கும் விரைவாக ஓட்டங்களை எடுக்கும் திறனுக்கும் பெயர் பெற்றவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் உட்பட பல சாதனைகளை படைத்துள்ளார்.
3. MS தோனி (Mahendra Singh Dhoni)
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி 115 மில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரராக உள்ளார். இலங்கை பணமதிப்பின்படி சுமார் ரூ.3,530 கோடி ஆகும்.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தோனி தனது அமைதியான நடத்தை மற்றும் அதிக அழுத்த சூழ்நிலைகளில் அணியை வழிநடத்தும் திறனுக்காக அறியப்படுகிறார்.
தோனி இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கு அழைத்துச் சென்று, 2011-இல் இந்தியாவிற்கு இரண்டாவது உலகக் கோப்பையை வென்று தந்தார்.
ஆரவாரம் இல்லாமல் வளர்ந்துவரும் முகேஷ் அம்பானி தம்பியின் மகன்கள்., சொகுசு கார்கள், விமானம் உட்பட சொத்து மதிப்பு தெரியுமா?
4. விராட் கோலி (Virat Kohli)
விராட் கோலி 112 மில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலகின் நான்காவது பணக்கார கிரிக்கெட் வீரராக உள்ளார். இலங்கை பணமதிப்பின்படி சுமார் ரூ.3438 கோடி ஆகும்.
India national cricket team-ன் முன்னாள் கேப்டன் தனது ஆக்ரோஷமான அணுகுமுறை மற்றும் அசுர வேகத்தில் ஓட்டங்களை எடுக்கும் திறனுக்காக அறியப்படுகிறார். இன்றும் தனது ஆட்டத்தில் மிகவும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்.
விராட் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார். 2024 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் King Kohli அபார ஃபார்மில் உள்ளார்.
5. ரிக்கி பாண்டிங் (Ricky Ponting)
கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங்கின் சொத்து மதிப்பு 75 மில்லியன் டொலர் ஆகும். இலங்கை ரூபாவின் மதிப்பில் சுமார் ரூ.2302 கோடி ஆகும்.
ரிக்கி பாண்டிங் அவரது ஆக்ரோஷமான தலைமைத்துவ பாணி மற்றும் முன்னணியில் இருந்து வழிநடத்தும் திறனுக்காக பிரபலமானவர்.
பாண்டிங் அவுஸ்திரேலியாவை (Australian Men’s Cricket Team) மூன்று உலகக் கோப்பை வெற்றிகளுக்கு வழிநடத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
6. ஜாக் காலிஸ் (Jacques Kallis)
கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜாக் காலிஸின் சொத்து மதிப்பு 70 மில்லியன் டொலர் ஆகும். இது இலங்கை ரூபாவின் மதிப்பில் சுமார் ரூ.2148 கோடி ஆகும்.
South Africa national cricket team வீரரான ஜாக் காலிஸ் தனது திடமான நுட்பம் மற்றும் எளிதாக ஓட்டங்கள் எடுக்கும் திறனுக்காக அறியப்பட்டார்.
காலிஸ் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சிறந்த களத்தடுப்பாளராகவும் இருந்தார். கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் இவரும் ஒருவர்.
7. பிரையன் லாரா (Brian Lara)
மிகவும் திறமையான பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரையன் லாராவின் சொத்து மதிப்பு $60 மில்லியன் ஆகும். இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1842 கோடி ஆகும்.
West Indies cricket team-ன் ஜாம்பவான் தனது நேர்த்தியான நுட்பம் மற்றும் எளிதாக ஓட்டங்களை அடிக்கும் திறனுக்காக அறியப்பட்டார்.
லாரா டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக தனிநபர் ஸ்கோர் (400 நாட் அவுட்) மற்றும் முதல் தர இன்னிங்ஸில் அதிக எண்ணிக்கை (501 நாட் அவுட்) உட்பட பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
8. வீரேந்திர சேவாக் (Virender Sehwag)
வீரேந்திர சேவாக் இந்திய அணியின் ஆபாரமான தொடக்க வீரர் ஆவார். கொஞ்சம் கூட பயம் இல்லாத அணுகுமுறை மற்றும் அசுர வேகத்தில் ஓட்டங்களை எடுக்கும் திறனுக்காக அறியப்பட்டவர்.
வலது கை துடுப்பாட்டக்காரரான சேவாக்கின் சொத்து மதிப்பு $40 மில்லியன் ஆகும். இலங்கை பணமதிப்பில் ரூ.1228 கோடி ஆகும்.
9. யுவராஜ் சிங் (Yuvraj Singh)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சொத்து மதிப்பு 35 மில்லியன் டொலர். (இலங்கை ரூபா.1074 கோடி)
களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனது சண்டை மனப்பான்மையால் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். இந்திய ஆல்-ரவுண்டர் 2007 ஐசிசி உலக Twenty 20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசியதற்காக மிகவும் பிரபலமானவர். இந்தியா அணி வென்ற 2011 உலகக் கோப்பையில் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
10. ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith)
சிறந்த அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் 30 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார். இலங்கை பணமதிப்பின்படி ரூ.921 கோடி ஆகும்.
ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்தார், ஆனால் பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்காக தண்டிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சமீபத்தில் பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தினார்.
இந்த கிரிக்கெட் வீரர்கள் அந்தந்த நாடுகளுக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், தங்கள் கடின உழைப்பு மற்றும் விளையாட்டிற்கான அர்ப்பணிப்பு மூலம் பெரும் செல்வத்தையும் ஈட்டியுள்ளனர்.
உலகெங்கிலும் கிரிக்கெட்டின் பிரபலமடைந்து வருவதால், இந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிறரின் சொத்து மதிப்பு வரும் ஆண்டுகளில் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Richest Cricketer in the world, Indias richest cricketer, Sachin Tendulkar Net Worth, MS Dhoni Net Worth, Virat Kohli Net Worth, Yuvaraj Singh Net Worth, Virender Sehwag Net Worth