சுற்றுலாதுறையில் முன்னணியில் உள்ள நாடுகளின் பட்டியல் - முதலிடம் எந்த நாடு தெரியுமா?
சுற்றுலாதுறையில் முதல் 10 இடம் வகிக்கும் நாடுகளின் பட்டியலை WTTC வெளியிட்டுள்ளது.
உலக சுற்றுலா பொருளாதாரம்
கொரோனாவிற்கு பின்னர், சுற்றுலாதுறை சோர்வை சந்தித்த போதிலும், உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறை 2023 ஆம் ஆண்டில், 10.9 டிரில்லியன் டொலர்களை உலகப் பொருளாதாரத்திற்கு பங்களித்ததாக உலக பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) தெரிவித்துள்ளது.
2034 ஆம் ஆண்டுக்குள், சுற்றுலாத்துறை 16 டிரில்லியன் டொலரை எட்டும் என்றும், இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீதத்திற்கும் அதிகமாகும் எனவும் உலக பொருளாதார மன்றம் (WEF) கணித்துள்ளது.
இந்நிலையில், உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சிலின் (WTTC), சுற்றுலா பொருளாதாரத்தில் முதல் 10 இடம் வகிக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுளது.
இதில், அமெரிக்கா 2,360 பில்லியன் டொலர் பங்களிப்புடன், உலகின் மிகப்பெரிய சுற்றுலாப் பொருளாதார நாடாக முதலிடத்தில் உள்ளது. 1,300 பில்லியன் டொலர் பங்களிப்புடன் சீனா 2வது இடத்தில் உள்ளது.
487.6 பில்லியன் டொலர்களுடன் ஜெர்மனி 3 வது இடத்திலும், 297 பில்லியன் டொலர்களுடன் ஜப்பான் 4 வது இடத்திலும், 295.2 பில்லியன் டொலர்களுடன் பிரித்தானியா 5 வது இடத்திலும், 264.7 பில்லியன் டொலர்களுடன் பிரான்ஸ் 6வது இடத்திலும், 261.6 பில்லியன் டொலர்களுடன் மெக்சிகோ 7 வது இடத்திலும் உள்ளது.
8வது இடத்தில் இந்தியா
231.6 பில்லியன் டொலர்களுடன் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
முன்னதாக 10வது இடத்தில் இருந்த இந்தியா, 2 இடங்கள் முன்னேறி இருப்பது சுற்றுலா துறையில் நாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியா நான்காவது இடத்திற்கு உயரும் என்று WTTC கணித்துள்ளது.
231.3 பில்லியன் டொலர்களுடன் இத்தாலி 9 வது இடத்திலும், 227.9 பில்லியன்டொலர்களுடன் ஸ்பெயின் 10 வது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |