2025-ல் உலகின் டாப் 10 பணக்கார நகரங்கள்; பட்டியலில் பின்தங்கிய லண்டன், பாரிஸ்
2025-ஆம் ஆண்டிற்கான உலகின் டாப் 10 பணக்கார நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான 'உலகின் பணக்கார நகரங்கள்' பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
நியூயார்க் நகரத்தில் 3.84 லட்சம் மில்லியனர்கள் மற்றும் 66 பில்லியனர்கள் வசிக்கின்றனர்.
இரண்டாவது இடத்தில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிலிக்கான் வேலியைக் கொண்ட Bay Area உள்ளது (3.42 லட்சம் மில்லியனர்கள், 82 பில்லியனர்கள்).
ஜப்பானின் டோக்கியோ (2.92 லட்சம் மில்லியனர்கள்), சிங்கப்பூர் (2.42 லட்சம் மில்லியனர்கள்), லாஸ் ஏஞ்சல்ஸ் (2.20 லட்சம் மில்லியனர்கள்) ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
லண்டன் ஆறாம் இடத்திலும், பாரிஸ் ஏழாம் இடத்திலும், ஹொங்ஹொங், சிட்னி, சிகாகோ அடுத்தடுத்த இடங்களுடன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்தியாவிலிருந்து மும்பை மற்றும் டெல்லி உலகின் செல்வந்த நகர பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
51,200 மில்லியனர்கள், 25 பில்லியனர்களைக் கொண்டுள்ள மும்பை 27வது இடத்தில் உள்ளது. கடந்த ஒரு தசாப்தத்தில் மும்பை மில்லியனர் எண்ணிக்கையில் 69% வளர்ச்சி கண்டுள்ளது.
31,200 மில்லியனர்கள் மற்றும் 16 பில்லியனர்களுடன் டெல்லி 39-வது இடத்தில் உள்ளது. இது 2014 முதல் 2024 வரை 82% வளர்ச்சி பெற்றுள்ளது.
மேலும், பெங்களூருவும் எதிர்காலத்தில் மிலியனேர் நகரமாக வளரக்கூடிய முக்கிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகள் Henley & Partners நிறுவனமும் New World Wealth அமைப்பும் இணைந்து வெளியிட்ட “World’s Wealthiest Cities Report 2025” அறிக்கையில் இடம்பெற்றவை.
இந்த அறிக்கை, உலகளவில் செல்வந்தர்கள் எந்த நகரங்களில் அதிகமாக வாழ்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை வெளிக்கொணர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |