துபாயில் Real Estate சொத்துக்களை வாங்கி குவிக்கும் வெளிநாட்டவர்கள்: இந்தியர்கள் முன்னிலை
துபாயின் Real Estate சந்தையில், இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளனர்.
பாகிஸ்தானியர்கள் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
இந்த தகவலை Better Homes என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டு, துபாயில் AED 423 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயில் Real Estate சொத்துக்களை வாங்கியா டாப்-5 வெளிநாட்டவர்கள் - 2024
- இந்தியர்கள் (India)
- பிரித்தானியர்கள் (UK)
- அமெரிக்கர்கள் (USA)
- ஃபிரான்ஸ் நாட்டவர்கள் (France)
- பாகிஸ்தானியர்கள் (Pakistan)
ரஷ்யர்கள் 2023-ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஒன்பதாவது இடத்திற்கு கீழே சரிந்துள்ளனர். மேலும், துருக்கி நாடு பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
real estate in Dubai, Indians remain top buyers of Dubai real estate in 2024