2023 ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத முக்கிய 5 வீரர்கள்: ஆச்சரியத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், இதில் முக்கிய 5 வீரர்களை எந்த அணியும் சீண்டாமல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் மினி ஏலம்
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், வரும் ஐபிஎல் தொடர் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கொச்சியில் வைத்து நடந்து முடிந்துள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் குர்ரன் நிக்கோலஸ் பூரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
Some broke the bank ??
— IndianPremierLeague (@IPL) December 23, 2022
Some entered an intense bidding war ??
While some got the player of their choice ?
Here are the ?buys at the #TATAIPLAuction 2023 ? pic.twitter.com/93LXEYegWa
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சுமார் 16.25 கோடிக்கு எடுத்து அசத்தியுள்ளது. மேலும் சாம் குர்ரனை 18.50 கோடிக்கு பஞ்சாப் அணியும், கேமரூன் கிரீனை மும்பை அணி 17.50 கோடிக்கு ஏலத்தில் தட்டிச் சென்றனர்.
இவ்வாறு இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் கோடிகளில் ஒருபுறம் புரண்டாலும், மறுபுறம் t20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த முக்கிய வெளிநாட்டு வீரர்கள் சிலர் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போன நிலையும் ஏற்பட்டுள்ளது.
விலை போகாத வீரர்கள்
டேவிட் மாலன்
இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன், அவரது தொடக்க காலத்தில் சர்வதேச t20 போட்டிகளில் முதலிடத்தில் இருந்து வந்தார்.
t20 போட்டிகளை பொறுத்தவரை 55 போட்டிகளில் விளையாடி உள்ள டேவிட் மாலன் 1748 ஓட்டங்கள் குவித்து பேட்டிங் சாரசரியை 38.84 ஆக வைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் கடந்த ஆண்டு அறிமுகமான டேவிட் மாலன் பஞ்சாப் அணிக்காக 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஆனால் சர்வதேச போட்டிகளில் தற்போது அவருடைய இறங்கு முகம் காரணமாக ஐபிஎல் அணிகள் இவரை அணியில் சேர்த்து கொள்ள முன்வரவில்லை
டேரி மிட்சல்
நியூசிலாந்து வீரர் டேரி மிட்சல், நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக t20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான டேரி மிட்சல், இந்த ஆண்டு எந்த அணியாலும் வாங்கப்பட வில்லை
முஜீப் உர் ரஹ்மான்
ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான், 21 வயதே ஆன இளம் வீரர் 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி பிரபலமடைந்தார்.
கடந்த 2018ம் ஆண்டு 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், ஆனால் 2021ம் ஆண்டு ஒரு போட்டியில் மட்டும் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஜேம்ஸ் நீஷம்
நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம், நியூசிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்தவர், கடந்த 2014ல் ஐபிஎல் போட்டிகளில் கால் பதித்தார்.
2021 ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார், இருப்பினும் 2023ம் ஐபிஎல் ஏலத்தில் அவரை எடுக்க அணிகள் முன்வரவில்லை
முகமது நபி
ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக இருப்பவர்.
2017 ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய முகமது நபியின் தொடர்ச்சியான பின்னடைவு காரணமாக இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.