ஷ்ரேயா கோஷல் முதல் ஆஷா போஸ்லே வரை., இந்தியாவின் 5 பெரும் பணக்கார பாடகிகள்
இந்திய இசைத்துறையில் பல திறமையான பெண் பாடகர்கள் தங்கள் அபாரமான குரலால் ரசிகர்களை ஈர்த்துள்ளனர்.
ஷ்ரேயா கோஷல் முதல் ஆஷா போஸ்லே வரை, இந்தியாவின் 5 மிகப்பெரிய பணக்கார பாடகிகள் மற்றும் அவர்களது சொத்து மதிப்பை இங்கே பார்க்கலாம்.
1. துல்சி குமார் (Tulsi Kumar)
சொத்து மதிப்பு: ரூ.210 கோடி
மறைந்த குல்ஷன் குமாரின் மகளான துல்சி குமார், இந்திய இசைத்துறையில் முன்னணி பாடகியாக வளர்ந்துள்ளார். "Tum Jo Aaye" (2010) போன்ற பாடல்களால் புகழ் பெற்றுள்ளார்.
2. ஷ்ரேயா கோஷல் (Shreya Ghoshal)
சொத்து மதிப்பு: ரூ.180 முதல் 185 கோடி
இந்தியாவின் மிகப்பெரிய பின்னணி பாடகிகளில் ஒருவரான ஷ்ரேயா கோஷல், ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. இவருக்கு Range Rover Sport, BMW 5 Series, Mercedes-Benz S-Class போன்ற வாகனங்களும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் வீடுகளும் உள்ளன.
3. சுனிதி கவுன் (Sunidhi Chauhan)
சொத்து மதிப்பு: ரூ.100 முதல் 110 கோடி
பல வருடங்களாக தனித்துவமான குரலால் பிரபலமான சுனிதி கவுனின் Sheila Ki Jawani (2010) பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது Filmfare சிறந்த மகளிர் பின்னணி பாடகி விருதை வென்றது.
4. நேஹா கக்கர் (Neha Kakkar)
சொத்து மதிப்பு: ரூ.104 கோடி
நேஹா கக்கர், பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். Kala Chashma (2016) பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
5. ஆஷா போஸ்லே (Asha Bhosle)
சொத்து மதிப்பு: ரூ.80 - முதல் 100 கோடி
இந்தியாவின் மகத்தான பாடகிகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, ஏழு தசாப்தங்களுக்கு மேல் இசைத்துறையில் நிலைத்து உள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இந்த பாடகிகள், அவர்களின் திறமையாலும் கடுமையான உழைப்பாலும் இந்திய இசைத்துறையில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |