அமெரிக்காவை தாக்கிய அதிபயங்கர சூறாவளி: 4 பேர் பலி, 200 வீடுகள் தரைமட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணத்தை நாசமாக்கிய சூறாவளி புயலில் சிக்கி குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூறாவளியில் சிக்கிய 4 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணத்தை வியாழக்கிழமை இரவு தாக்கிய சூறாவளி காற்றால் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்காம்பியா மாவட்ட தீயணைப்பு மீட்பு படையின் தகவலின் படி, சூறாவளி தாக்கி மரம் சரிந்து விழுந்ததில் புளோரிடாவின் பென்சகோலாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
AP
அத்துடன் டெக்சாஸின் பெர்ரிடன் நகரில் மீதமுள்ள மூன்று உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. இங்கு சூறாவளி தாக்கியதில் வீடுகள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது இதில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதில் பெக்கி ராண்டால் என்ற 60 வயதுடைய பெண் அச்சு நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டார், சிண்டி பிரான்ஸ்கிரோவ் என்ற மற்றொரு 60 வயதுடைய பெண் உணவு வங்கியிலும், 11 வயதுடைய சிறுவன் மத்தேயு ராமிரெஸ் டிரெய்லர் பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்டார்.
AP
64 வயதுடைய ரூபன் வில்லோகாஸ் என்ற நபர் காணாமல் போய் இருப்பதாகவும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் பெர்ரிட்டன் தீயணைப்பு தலைவர் பால் டச்சர் தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு துண்டிப்பு, வீடுகள் சேதம்
சூறாவளி கடந்த பாதை சுமார் 1.5 மைல் தூரம் என தீயணைப்பு தலைவர் மதிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 200 வீடுகள் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
AP
மேலும் தற்போது பெரிடன் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதாக Xcel எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ABC NEWS