எரிமலை வாயினருகே நின்று புகைப்படம் எடுக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்
இந்தோனேசியாவில், எரிமலை ஒன்றின் வாயினருகே நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், தவறி எரிமலைக்குள் விழுந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

Credit: Newsflash
எரிமலை வாயினருகே நின்று புகைப்படம் எடுக்க முயன்ற பெண்
கடந்த வார இறுதியில், இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சீனர்களான ஒரு கணவனும் மனைவியும், Banyuwangi என்னுமிடத்திலுள்ள, Ijen என்னும் எரிமலையின் அருகே நின்று சூரியோதயத்தைக் காண திட்டமிட்டிருக்கிறார்கள்.

Credit: Newsflash
அப்போது, அந்த எரிமலையின் வாயருகே நின்றபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் Huang Lihong (31) என்னும் அந்தப் பெண்.

Credit: Newsflash
கணவர் புகைப்படம் எடுக்க, விதவிதமாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த Huang, திடீரென கால் தடுக்கி எரிமலைக்குள், 120 அடி பள்ளத்திற்குள் விழுந்திருக்கிறார்.

Credit: Newsflash
அவ்வளவுதான், பிறகு அவரது உடலை வெளியே எடுக்கவே மீட்புக்குழுவினருக்கு இரண்டு மணி நேரம் ஆகியுள்ளது. இதற்கிடையில், வெளியான புகைப்படங்களில் ஒன்றில், Huang எரிமலை வாயினருகே ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பதைக் காணமுடிகிறது.
வீடியோவை காண
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |