நகரும் நடைபாதையில் சிக்கி தனது காலை இழந்த பெண்! விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்
தாய்லாந்து விமான நிலைய நகரும் நடைபாதையில் (moving walkway), பெண் பயணி ஒருவரின் கால் சிக்கிக் கொண்டதில், அவரது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கியது.
சிக்கிய பெண்ணின் கால்
பாங்காக்கின் டான் முயாங் விமான நிலையத்தில் இருந்து பெண்ணொருவர், தெற்கு நாகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமான நிலையத்தின் டெர்மினல் 2யில் செல்லவிருந்தார்.
குறித்த பெண் பயணியின் கால் எதிர்ப்பாராத விதமாக நகரும் படிக்கட்டில் சிக்கிக் கொண்டது. இயந்திர படிக்கட்டுகள் இயக்கத்தில் இருந்ததால் அவரால் காலை வெளியே எடுக்க முடியவில்லை.
அவரது மூட்டு தசை, தசைநார் மற்றும் எலும்பு வழியாக தொடர்ந்து கிழிந்ததால் திகிலடைந்த மக்கள் அவசரகால பொத்தனை அணைக்க தடுமாறினர்.
ViralPress
விசாரணைக்கு உத்தரவு
உடனடியாக மருத்துவக் குழு விரைந்து அப்பெண்ணை மீட்டது. ஆனால் அவரது கால் துண்டானது. மேலும் காலை இணைக்க முடியாது என்று கூறியுள்ளனர். எனினும் சாத்தியத்தை மதிப்பிடுவதற்கு அந்த பெண் வேறு மருத்துவமனைக்கு தன்னை மாற்றுமாறு கோரினார்.
இதற்கிடையில் விபத்திற்கான காரணத்தை கண்டறிய விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ViralPress
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |