ஹமாஸ் ஆயுதக்குழுவை எதிர்த்து ஒற்றை ஆளாக போராடிய இளம்பெண்: இரும்பு மங்கை என புகழாரம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதையடுத்து உலகமே பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில், தங்கள் மக்களைக் காப்பாற்ற உயிரையே பணயம் வைக்கும் இஸ்ரேல் நாட்டு இளம்பெண்களைக் குறித்த செய்திகள் வெளியாகி ஆச்சரியம், நெகிழ்ச்சி என பலவித உணர்வுகளை உருவாக்கிவருகின்றன.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து நிற்கும் பெண்கள்
நேற்று, ஹமாஸ் ஆயுதக்குழுவினரை எதிர்த்து நின்று, தன் சகாக்கள் 12 பேருடன் இணைந்து, தன் கிராமத்திலுள்ள சுமார் 700 பேரைக் காப்பாற்றிய Inbar Lieberman (26) என்னும் இளம்பெண்ணைக் குறித்த செய்தி வெளியாகியிருந்தது.
இன்றும், தன் கிராமத்தைக் காப்பாற்ற துணிச்சலாக ஒற்றை ஆளாக போராடிய ஒரு இளம்பெண்ணைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகி நெகிழவைத்துள்ளது.
Credit: instagram
ஹமாஸ் ஆயுதக்குழுவை எதிர்த்து ஒற்றை ஆளாக போராடிய இளம்பெண்
சனிக்கிழமையன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்கத் துவங்கியதும், சில கிராம மக்களும், இஸ்ரேல் எல்லை பாதுகாப்புப் படையினரும் தங்கள் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அவ்வகையில், Yakhini என்னும் கிராமத்தைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியவர்களில் ஒருவர், 19 வயதேயான Ravit Hana Assayag என்னும் இளம்பெண்.
Credit: instagram
Hana, ஒன்பது மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்திருக்கிறார். இஸ்ரேல் மக்களுடைய பண்டிகை ஒன்று தொடர்பிலான விடுமுறைக்காக தன் தந்தையுடன் Hana அமெரிக்காவிலுள்ள நியூயார்க்குக்கு சென்றிருந்த நிலையில், நாட்டைக் காக்கும் பொறுப்புடன் மீண்டும் இஸ்ரேல் திரும்பியபோதுதான் திடீரென ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
Credit: EPA
வீர மரணம்
தன் சகாக்களுடன் தன் கிராமத்தைக் காப்பாற்றப் போராடிய Hana, மூன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினரை சுட்டுக் கொன்றிருக்கிறார். அவரது சக வீரர்கள் எதிரிகள் எட்டு பேரை சுட்ட நிலையில், ஷெட் ஒன்றிற்குள் ஆயுதக்குழுவைச் சேர்ந்த சிலர் பதுங்கியிருக்கலாம் என சந்தேகித்த Hana, தான் சென்று பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றிருக்கிறார்.
Credit: AFP
அவர் சந்தேகப்பட்டது போலவே அங்கு ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த சிலர் பதுங்கியிருந்திருக்கிறார்கள். அவர்கள் Hanaவை சுட, அவர் உயிரிழந்திருக்கிறார்.
ஆனாலும், அவர் அங்கு சென்றதால்தான் அங்கு சிலர் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஆக, தன் சக வீரர்களைக் காப்பாற்ற, தன் உயிரைப் பணயம் வைத்த Hana, தான் விரும்பியதுபோலவே, தன் நாட்டுக்காக வீர மரணம் அடைந்திருக்கிறார்.
Credit: instagram
நாட்டைக் காக்க தன் உயிரை ஈந்த Hanaவை, இரும்பு மங்கை என நியூயார்க்கிலுள்ளவர்கள் புகழ்ந்துரைப்பதாக தெரிவிக்கிறார் Hanaவின் தந்தை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |