லொறி மீது வேகமாக மோதிய ரயில்: ஆண்கள், பெண்கள் என தாய்லாந்தில் 8 பேர் பலி
தாய்லாந்தில் லொறி மீது ரயில் மோதியதில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
லொறி மீது மோதிய ரயில்
நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய்லாந்தின் சஷொன்சொ மாகாணத்தில் உள்ள முவாங் மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு லொறி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அப்போது ரயில்வே தண்டவாளத்தை லொறி கடக்க முயன்றது ஆனால் அதிவேகமாக வந்த ரயில் லொறி மீது மோதியது.
FM91 Trafficpro/YouTube
இந்த விபத்தில் லொறி தண்டவாளத்தில் இருந்து தூக்க விசப்பட்டு பலத்த சேதமடைந்தது.
8 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
AP
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |