பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. இந்திய எல்லையில் நில அதிர்வு: பீதியில் மக்கள்
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள எல்லைப் பகுதியில் இன்று காலை 9:45 மணி அளவில் 5.7 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் நடுக்கமானது உணரப்பட்டுள்ளது.
இந்த நில அசைவானது நிலநடுக்கத்தால் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அல்லது சோனிக் பூம் போன்ற காரணங்களாகவும் இருக்கலாம் என யூரோ-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தந்து த்விட்டேர் பதிவில் தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் நடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவை தொடர்பு கொண்டு நிலைமையை குறித்து கேட்டு அறிந்தார்.
மேலும் இன்று அதிகாலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி என்ற பகுதியிலும் 3.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Strong tremors felt in Kashmir. #earthquake pic.twitter.com/YSadXUw9sQ
— Ieshan Wani (@Ieshan_W) February 5, 2022