மூன்றாம் உலகப் போரை நிறுத்திவிட்டேன்... ஜனாதிபதி ட்ரம்ப் பெருமிதம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்திக்க இருப்பதை உறுதி செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், மூன்றாம் உலகப் போர் வெடிக்கவிருந்ததைத் தடுத்ததாக கூறியுள்ளார்.
விட்டுத்தர முடியாது
எதிர்வரும் வெள்ளிக்கிழமை விளாடிமிர் புடினுடன் ட்ரம்ப் நேரில் சந்தித்து உக்ரைன் போர் தொடர்பில் விவாதிக்க இருக்கிறார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதே இந்த சந்திப்பின் நோக்கமாக உள்ளது.
மட்டுமின்றி, போரை முடிவிற்கு கொண்டுவர இரு தரப்பினரும் தங்கள் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கும் மன நிலைக்கும் வர வேண்டும் என்ற கோரிக்கையும் ட்ரம்பால் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு அடி நிலத்தையும் விட்டுத்தர முடியாது என்றே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழுத்தம் திருத்தமாக பதிலளித்துள்ளார். இப்படியான ஒரு நெருக்கடி எழும் என்பதாலையே, இந்த சந்திப்பில் ஜெலென்ஸ்கி கலந்து கொள்வதை புடின் எதிர்த்தார்.
மட்டுமின்றி, கிரிமியா போன்று உக்ரைன் பிராந்தியங்களைக் கைப்பற்றுவதே புடினின் நோக்கமாகவும் இருந்துள்ளது. இந்த நிலையில், புடினுடன் இதுவரை சந்திப்பு முன்னெடுக்கப்படாத நிலையிலும், தாம் தலையிடவில்லை என்றால், உக்ரைன் - ரஷ்ய போர் மூன்றாம் உலகப் போராக வெடித்திருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு சாதகமான
மூன்றாம் உலகப் போரை நிறுத்தி விட்டேன், உலகப் போர் அச்சுறுத்தல் இனி இல்லை என்றே ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அலாஸ்கா மாகாணத்தில் எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பு நடப்பதாக ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.
ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு ட்ரம்ப் கடைசியில் வருவார் என்பதுடன், ரஷ்யாவிற்கு சாதகமான முடிவையே ட்ரம்ப் எப்போதும் முன்னெடுப்பார் என்பதாலையே உக்ரைன் தனது நிலத்தை ஒருபோதும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு விட்டுத்தராது என ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், ரஷ்யாவே அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ரஷ்யாவே இந்தப் போரை தொடங்கியது, அதனால் அவர்களே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |