இளவரசர் ஆண்ட்ரூ பட்டம் பறிப்பு விவகாரம்: ட்ரம்ப் கருத்து
மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டது குறித்து அமெரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் கருத்து

தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ட்ரம்ப் நேற்று பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ராஜகுடும்பத்துக்கு பயங்கரமான விடயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. எனக்கு அது மிகவும் கவலையாக இருக்கிறது.
இது ஒரு துக்ககரமான சூழல், அது மிகவும் மோசம், நான் ராஜகுடும்பத்துக்காக வருந்துகிறேன் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததால் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

விடயம் என்னவென்றால், ட்ரம்பும் எப்ஸ்டீனுடைய நீண்ட கால நண்பர்தான்.

அதனால், ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாவதில் பிரச்சினைகளும் ஏற்பட்டன.
எப்ஸ்டீன் அமெரிக்காவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தொடர்பான ஆவணங்கள் வெளியாக இருந்தன.

ஆனால், அதற்குள் சிறையிலிருந்த எப்ஸ்டீன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர் தொடர்பான ஆவணங்கள் வெளியானால், அவரால் பல பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |