ட்ரம்ப் பற்றி தெரியும்... ஜெலென்ஸ்கியை கொல்ல திட்டமிட்டுள்ள விளாடிமிர் புடின்
போர் நிறுத்தம் தொடர்பில் டொனால்டு ட்ரம்பின் நகர்வுகள் அனைத்தும் தோல்வியில் முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிந்து வைத்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் வெறும் காகிதப்புலி
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் வெறும் காகிதப்புலி என புரிந்து வைத்துள்ள விளாடிமிர் புடின், அவர் ஆட்சிக்கு வரும் வரையில் காத்திருப்பதாக உலக விவகார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
புதிய அணுசக்தி கோட்பாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பது, ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னரே முதன்மையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற புடினின் வேகத்தைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முன்னரே, உக்ரைனுக்கான ஆதரவைக் கட்டுப்படுத்த இருப்பதாகவும் போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் டொனால்டு ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.
பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பேராசிரியர் க்ளீஸ் தெரிவிக்கையில், போர் நிறுத்தம் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் முன்னெடுக்கும் நகர்வுகள் எதுவும் செயலுக்கு வராது என்பதை ரஷ்ய ஜனாதிபதி அறிந்திருக்கிறார்.
உக்ரைனை கைப்பற்றும் திட்டம்
அத்துடன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்துவிட்டு, உக்ரைனை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்தையும் அவர் ஏற்கனவே வகுத்துள்ளார் என்றும், போரில் ரஷ்யா தோற்கடிக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் திட்டமிட்டு வருவதாக பேராசிரியர் க்ளீஸ் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் நடவடிக்கைகள் என்பது குறிப்பிட்ட சிலரது ஆலோசனைகளை சார்ந்திருக்கும் என்றும், ஜோ பைடனின் முடிவை ட்ரம்பின் மகன் விமர்சனம் செய்துள்ளது அதை உறுதி செய்வதாகவும் பேராசிரியர் க்ளீஸ் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி எந்த நிபந்தனை வைத்துக்கொண்டாலும் அதை ஏற்றுக்கொண்டு, போரை முடிவுக்கு கொண்டுவரவே ட்ரம்ப் அரசாங்கம் முயற்சி செய்யும் என்றும், இந்த விடயத்தில் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் உடன்பட வாய்ப்பில்லை என்றும் பேராசிரியர் க்ளீஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |