சீனாவை பொருட்படுத்தாமல் சவுதி அரேபியாவுக்கு F-35 போர் விமானங்களை விற்க ட்ரம்ப் ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சவுதி அரேபியாவுக்கு F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.
சவுதி இளவரசர் மொஹம்மது பின் சல்மான் நீண்ட காலமாக விரும்பிய முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது.
“சவுதி அரேபியா எங்கள் மிகப்பெரிய கூட்டாளி. அவர்களுக்கு F-35 விமானங்களை விற்பனை செய்வோம்” என வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு, சவுதி அரேபியாவை இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்த தூண்டும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வராது. காங்கிரஸ் அனுமதி, பெண்டகன் ஆய்வு, மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் நீண்டகால பேச்சுவார்த்தைகள் ஆகியவை தேவைப்படும்.
ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டாலும், விநியோகம் பல ஆண்டுகள் தாமதமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ட்ரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு F-35 விற்பனைக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
ஆனால், சீனாவுடன் அமீரகத்திற்கு இருந்த Huawei தொடர்புகள் காரணமாக, அந்த ஒப்பந்தம் இன்னும் நிறைவேறவில்லை.
இந்த விற்பனைக்கு இஸ்ரேல் கவலை தெரிவித்துள்ளது. ஏனெனில், அமெரிக்க சட்டப்படி, இஸ்ரேலுக்கு எப்போதும் qualitative military edge (QME) வழங்கப்பட வேண்டும். அதனால், இஸ்ரேல் தனது பாதுகாப்பு நிலையை பாதிக்காமல் இருக்க அமெரிக்கா கூடுதல் உத்தரவாதங்களை வழங்கும்.
மேலும், சவுதி அரேபியாவுடன் சீனாவின் பாதுகாப்பு தொடர்புகள் காரணமாக, F-35 தொழில்நுட்பம் சீனாவுக்கு செல்லக்கூடும் என பெண்டகன் அறிக்கை எச்சரித்துள்ளது.
இருப்பினும், ட்ரம்பின் இந்த ஒப்புதல், சவுதி அரேபியாவுக்கு பெரும் அரசியல் மற்றும் பாதுகாப்பு வெற்றி எனக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump F-35 fighter jets Saudi Arabia deal, US arms sales Saudi Arabia China concerns, Lockheed Martin F-35 100M dollar jet sale, Saudi Arabia Israel diplomatic ties F-35, Pentagon warns China tech transfer risk, Trump White House Saudi defense agreement, US Congress approval F-35 Saudi purchase, Israel qualitative military edge F-35 sale, UAE stalled F-35 deal Trump precedent, Mohammed bin Salman US defense partnership