தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ
கிரீன்லாந்தை வாங்குவதில் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்றும், ஆனால் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறார் என்றும் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
இராணுவத்தைப் பயன்படுத்த
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கிரீன்லாந்தின் மீது படையெடுப்போம் என்று வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ திங்கட்கிழமை குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.

அதில், அந்தத் தீவை முறைப்படி வாங்குவதே ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம் என்பதையும் ரூபியோ விளக்கியுள்ளார். மெக்சிகோ மற்றும் கிரீன்லாந்து போன்ற உலகின் பிற பகுதிகளில் ட்ரம்ப் இராணுவத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளாரா என்று செனட் சபையின் சிறுபான்மைக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கேட்டதைத் தொடர்ந்தே, மார்கோ ரூபியோ இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
மட்டுமின்றி, அடுத்த வாரம் டென்மார்க் அதிகாரிகளை இந்த விவகாரம் தொடர்பில் தாம் சந்திக்க இருப்பதாகவும் ரூபியோ குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க், மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிரீன்லாந்திற்கு எதிராக ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், அமெரிக்கா இல்லை என்றால் ரஷ்யாவும் சீனாவும் நேட்டோ மதிக்காது என்றும், அமெரிக்காவிற்கு உண்மையிலேயே நேட்டோ அமைப்பின் உதவி தேவைப்பட்டால் அந்த அமைப்பு அமெரிக்காவிற்குத் துணையாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு என்றும் ட்ரம்ப் சாடியுள்ளார்.
மேலும், அவர்கள் நமக்காக இல்லாவிட்டாலும், நாங்கள் எப்போதும் நேட்டோவிற்காக இருப்போம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவை மட்டுமே பயப்படுவதாகவும் மதிப்பதாவும் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, கிரீன்லாந்தைக் கைப்பற்றப் போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்ததால், ஐரோப்பா பதற்றத்தில் உள்ளது.
மதிப்பு 4 டிரில்லியன் டொலர்
இதனிடையே, அமெரிக்கா கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது என்பது நேட்டோ அமைப்பின் முடிவுக்கு வழிவகுக்கும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் இந்த வார தொடக்கத்தில் எச்சரித்திருந்தார்.
--- Reuters
அத்துடன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில் கிரீன்லாந்து எப்போதும் அதன் மக்களுக்கே சொந்தமானது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
டெக்சாஸ் மாகாணத்தின் அளவை விட மூன்று மடங்குக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது கிரீன்லாந்து தீவு. இந்தத் தீவு வளங்களின் பொக்கிஷமாகவும் திகழ்கிறது; ஐரோப்பிய ஒன்றியத்தால் அரிதானவை என வகைப்படுத்தப்பட்ட 34 அரிய மண் கனிமங்களில் 25 எண்ணிக்கை இங்கே உள்ளன.
--- Reuters
சுற்றுச்சூழல் காரணங்களுக்காக கிரீன்லாந்து தற்போது கடலோர எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்குத் தடை விதித்துள்ள போதிலும், அந்தத் தீவின் வளங்களின் மொத்த மதிப்பு 4 டிரில்லியன் டொலராக இருக்கும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாகவே ட்ரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன்லாந்து மீது இலக்கு வைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |