வாஷிங்டன் டி.சி.யில் அமையவிருக்கும் “Arc de Trump”: டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வாஷிங்டன் டி.சி.யில் “ஆர்க் டி டிரம்ப்” என்ற பிரம்மாண்ட சின்னம் குறித்த திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார்.
ஆர்க் டி டிரம்ப் (Arc de Trump)
பாரிஸின் பிரபலமான “ஆர்க் டி ட்ரையம்ப்(Arc de Triomphe) என்ற கட்டிட சின்னத்தை போன்று வாஷிங்டன் டி.சி.யில் “ஆர்க் டி டிரம்ப்” (Arc de Trump) என்ற பிரம்மாண்ட கட்டுமான சின்னத்திற்கான புதிய திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அடுத்த வருடம் வர இருக்கும் அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதனை கொண்டாடும் வகையில் இந்த “ஆர்க் டி டிரம்ப்” திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த “ஆர்க் டி டிரம்ப்” வாஷிங்டன் டி.சி.யின் நுழைவு வாயிலாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நன்கொடையாளர்கள் விருந்தில், இந்த புதிய சின்னம் அமெரிக்காவின் பலம், ஒற்றுமை மற்றும் அதன் உணர்வுகளை குறிக்கும் அழகான கூடுதலாக இருக்கும் என்று டிரம்ப் விவரித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட அமைவிடம்
“ஆர்க் டி டிரம்ப்” நினைவு வாயில், லிங்கன் நினைவகத்தின் ஏதிரே ஆர்லிங்டன் நினைவக பாலத்தின் நுழைவாயிலுக்கு அருகே உள்ள மெமோரியல் சர்க்கிள் அருகே முன்மொழியப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |