சூரிய குளியலின் போது டிரம்பை கொல்லப்போவதாக எச்சரித்த ஈரான் - டிரம்ப் கொடுத்த பதில்
சூரிய குளியலின் போது டிரம்பை கொல்லப்போவதாக ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
டிரம்ப்பிற்கு கொலை மிரட்டல்
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி, கடந்த ஜூன் 13 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி, ஈரான் மீது குண்டு வீசியது.
இந்த போர் தற்காலிகமாக முடிவடைந்திருந்தாலும், ஈரான் அரசும், ஈரான் மக்களும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர் ஜவாத் லாரிஜானி அளித்த பேட்டியில், டிரம்ப் அவரது புளோரிடா இல்லமான மார்-எ-லாகோவிற்குள் அடிக்கடி செல்வது எங்களுக்கு தெரியும்.
அங்கு அவர் சூரிய குளியலில் ஈடுபடும் போது, ஒரு சிறிய ட்ரோனை வைத்து எங்களால் அவரை கொல்ல முடியும்" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை 30 மில்லியன் டொலர்களுக்கு(இந்திய மதிப்பில் ரூ.256 கோடி) மேல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக ஈரானிய வலைதளம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் பதில்
இந்நிலையில், ஈரானின் கொலை மிரட்டல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இதனை கொலை மிரட்டலாக கருதுகிறீர்களா? சூரிய குளியலில் எப்போது கடைசியாக ஈடுபட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், "ரொம்ப நாள் ஆகிவிட்டது. 7 வயதில் இருந்திருக்கலாம். எனக்கு அதில் பெரிய ஆர்வம் இல்லை. ஆமாம், அது ஒரு அச்சுறுத்தல் என நினைக்கிறேன்.
WATCH: @realDonaldTrump shrugs off an alleged threat from Iran that he can no longer safely sunbathe in Mar-a-Lago anymore. The president's response? He hasn't sunbathed since he was "around 7 or so." pic.twitter.com/wrFCbVgntC
— Fox News (@FoxNews) July 9, 2025
அது உண்மையில் ஒரு அச்சுறுத்தலா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்" என சிரித்து கொண்டே கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |