ரஷ்யாவுக்கு சென்று புடினை சந்திக்கும் டொனால்டு ட்ரம்ப்: முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்
ரஷ்யாவில் மே 9 ஆம் திகதி நடைபெறும் வெற்றி தின அணிவகுப்புக்காக ஜனாதிபதி ட்ரம்ப் மாஸ்கோவில் விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப்
1945 ஆம் ஆண்டு நாஜி ஜேர்மனியை தோற்கடித்ததன் கொண்டாட்டமாக மே 9 அன்று ரஷ்யாவில் அணிவகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவானது உக்ரைன் மீதான தனது படையெடுப்பை நியாயப்படுத்துவதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்புடைய விழாவில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்த ரஷ்யாவில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் விஜயம் செய்ய இருக்கிறார்.
இதனால், உக்ரைன் தொடர்பில் அவர் ரஷ்யாவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்றே கூறுகின்றனர். ரஷ்யா முன்னெடுக்கும் வெற்றி தினம் என்பது தங்களின் இராணுவ வலிமையை உலகிற்குக் காட்டுவதற்கான ஒரு வழியாகும்.
கடந்த ஆண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து வெற்றி தின கொண்டாட்டங்களை வெறும் 7 நிமிடங்களில் விளாடிமிர் புடின் முடித்துக் கொண்டார். ஆனால் இந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியை முதன்மை விருந்தினராக ரஷ்யா அழைத்துள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகள்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மக்கள் செல்வாக்கு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே என கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ட்ரம்ப், தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
மட்டுமின்றி, ரஷ்யாவுக்கு எதிராக போரை தொடங்கியதே உக்ரைன் தான் என குற்றஞ்சாட்டியிருந்தார். உக்ரைன் மீதான போருக்கு பின்னர் அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில்,
ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்த பின்னர், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கைகள் மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |