இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 50% வரிக்கு மேலும் ஒரு பொருளாதார நிபுணர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 50% வரி
ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கண்டித்து இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50% வர்த்தக வரியை விதித்துள்ளார்.
இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன், அமெரிக்காவின் வரியை ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் டிரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் மூத்த பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஜான் போல்டன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் பேசிய தகவலில், அமெரிக்கா இந்தியாவை குறித்து சிறிதும் யோசிக்கவில்லை, சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவால் நீண்ட நாள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது.
இந்தியா சுதந்திரமான நிலைப்பாட்டை கொண்ட பெரிய நாடு, தற்போது டிரம்ப் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |