போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப் - மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரானுடனான போர் நிறுத்தம் தன்னைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த டிரம்ப்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனிடையே நேற்று ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய நிலையில், ஈரானின் 80க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலானது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமீறல் எனவும், அமெரிக்காவின் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, முன்னாள் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஈராக் சென்றிருந்த, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மீண்டும் ஈரானுக்கு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநோயாளிகள். அவர்கள் தங்கள் மக்களையே காயப்படுத்தியுள்ளனர்.

ஈரானைச் சேர்ந்த மிகவும் ஆபத்தான நபர்களை நேற்று இரவு நாங்கள் மிகவும் சக்திவாய்ந்த முறையில் தாக்கினோம். நிச்சயமாக, அவர்கள் மோசமான ஆட்டக்காரர்கள். அவர்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது.
ஈரானுடனான போர் நிறுத்தம் தன்னைப் பொறுத்தவரை முடிந்துவிட்டது. இனி ஈரானியர்களுடன் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |