ரஷ்யாவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த ட்ரம்பின் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடனான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு
கடந்த ஜனவரியில், டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ரஷ்யா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை மூலம் அணு ஆயுதக் குறைப்புக்கான விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, "Golden Dom" எனப்படும் மிகப்பெரிய மற்றும் லட்சிய அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்க பென்டகனையும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தத்தை பராமரிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு
வெள்ளை மாளிகையில் நிருபர் ஒருவர், ரஷ்ய ஜனாதிபதி புடினின் புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க முன்மொழிந்ததை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ட்ரம்ப் "எனக்கு ஒரு நல்ல யோசனையாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய START இரு நாடுகளும் பயன்படுத்தப்படும் தாக்கக்கூடிய அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துகிறது.
அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்குக் கீழே இருக்க வேண்டும் என்று கோருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |