ஹமாஸ் பிடியிலிருந்த பிணைக்கைதிகள் விரைவில் விடுதலை: வெளியான அறிவிப்பு
ஹமாஸ் பிடியிலிருந்த பிணைக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த காட்சிகள்
நேற்று மாலை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், மாகாணங்கள் செயலரான மார்க்கோ ரூபியோ ட்ரம்பின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்து, அவரது காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
அந்தக் காகிதத்தை வாங்கிக்கொண்ட ட்ரம்ப், கூட்டத்தைத் தொடர, ரூபியோ டென்ஷனாக நின்றுகொண்டிருக்க, சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, நான் இப்போது மத்திய கிழக்கில் சில பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்வதற்காக போகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ட்ரம்ப்.
சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின், மாலை 6.51 மணிக்கு, ட்ரம்பின் சமூக ஊடகப்பக்கமான Truth Socialஇல் ஒரு அறிவிப்பு வெளியானது.
Donald J. Trump Truth Social Post 06:51 PM EST 10/08/25 pic.twitter.com/UVMCUpAqel
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) October 8, 2025
இஸ்ரேலும் ஹமாஸும், அமெரிக்கா முன்னின்று நடத்திய அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளன’ என்று கூறியது அந்த செய்தி.
அந்த செய்தி வெளியானதும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாஹூ முதல் இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வரை அந்த செய்தி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
பிணைக்கைதிகள் விரைவில் விடுதலை
மேலும், ட்ரம்ப் வெளியிட்ட செய்தியில், அனைத்து பிணைக்கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைதித் திட்டம் மற்றும் பிணைகைதிகள் விடுதலை என்னும் செய்தி, இருதரப்பிலும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கேள்விப்பட்டதும், பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் சிலர் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்கள். சிலர் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள்.
இஸ்ரேலில், அமெரிக்கக் கொடியுடன், ’ட்ரம்புக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்’ என ஆனந்தக் கூச்சலிட்டார்கள் மக்கள்.
காசாவில், மக்கள் கரவொலி எழுப்பி நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இருதரப்பும் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |