ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு ட்ரம்பின் பதில்
ரஷ்ய போர் விமானங்கள் எஸ்தோனியா நாட்டுக்குள் ஊடுருவிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அலட்சியம் செய்த ட்ரம்ப்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபோது, அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என நேட்டோ அமைப்பிலுள்ள நாடுகள் எதிர்பார்த்தபோது, அவர் உக்ரைனை அலட்சியம் செய்ததை உலகமே பார்த்தது.
ஆகவே, உக்ரைனைப்போல தங்கள் மீதும் ரஷ்யா போர் தொடுத்தால் அமெரிக்கா தங்களுக்கு உதவாது என்ற எண்ணம் உருவானதால், பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
ட்ரம்பிடம் நேரடியாக ஒரு கேள்வி
இந்நிலையில், ட்ரம்பிடம் நேற்று ஊடகவியலாளர்கள் நேரடியாகவே ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.
ரஷ்யா அத்துமீறினால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஆதரவாக உதவி செய்வீர்களா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார்கள் அவர்கள். அதற்கு, ஆம், உதவி செய்வேன் என்று பதிலளித்தார் ட்ரம்ப்.
மேலும், எஸ்தோனியாவில் ரஷ்ய போர் விமானங்கள் ஊடுருவியது குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார் ட்ரம்ப்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |