ஹார்முஸ் வழியாக ரகசியமாக 100 மில்லியன் பீப்பாய் எண்ணெயை கடத்திய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கடந்த மாதம் ஹார்முஸ் நீரிணையில் ரகசியமாக நடத்தப்பட்ட பெரிய நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதன்படி, அமெரிக்க இராணுவம் 200 வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பளித்து, 100 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை பாதுகாப்பாக கடத்த உதவியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது அமெரிக்கா தான், ஈரான் அல்ல என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை காரணமாக எண்ணெய் விலை 200 டொலரைத் தாண்டாமல், 90 டொலர் அளவில் நிலைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இரான் தாக்குதல்களால் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்து இன்னும் குறைந்த நிலையில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் தினசரி 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இங்கு கடத்தப்பட்ட நிலையில், தற்போது 1 பில்லியன் பீப்பாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக தடையாக கருதப்படுகிறது.
ஜே.பி.மார்கன் வங்கி, சில கப்பல்கள் தங்கள் சிக்னல்களை அணைத்து ரகசியமாக எண்ணெய் கடத்தி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு நேரடி பாதுகாப்பு அளிக்கவில்லை என்றாலும், அவற்றுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, ஈரான் ட்ரோன் தாக்குதல்கள் வணிக கப்பல்களுக்கு பெரும் மாயம் ஏற்படுத்துவதாகவும், அவை சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த ரகசிய நடவடிக்கை, உலக எண்ணெய் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |