ட்ரம்பால் தடுமாறும் உலக வர்த்தகம்... அமெரிக்காவை தொடர்பு கொண்ட 50 நாடுகள்
ஜனாதிபதி ட்ரம்பின் புதிய இறக்குமதி வரி வலுவுடன் அமுலுக்கு வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு குறித்து விவாதிக்க 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தையைத் தொடங்க
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்ய தமது வர்த்தகப் பங்காளி நாடுகள் அனைவர் மீதும் 10 சதவீத அடிப்படை வரியை விதித்தார் ஜனாதிபதி ட்ரம்ப். இதில் சீனா மீது மட்டும் அதிகபட்சமாக 54 சதவீத வரியை விதித்துள்ளார்.
ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் வரிவிதிப்பில் இருந்து தப்பியது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சிலின் இயக்குனர் Kevin Hassett தெரிவித்துள்ளார்.
அதிக வரிச்சுமுயை எதிர்கொள்வதால் இந்த நாடுகள் அமெரிக்காவை தொடர்பு கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டசின் கணக்கான நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்பதால், விலை இனி தாறுமாறாக உயரும்.
குறிப்பாக மெக்சிகோவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துணிகள், கணினிகள் முதல் கார்கள் வரை அனைத்தின் விலை உயர்வையும் எதிர்கொள்ள அமெரிக்க மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார மந்தநிலை
ஆனால் இது வெறும் குறுகிய கால கசப்பு மருந்து என்றே ட்ரம்ப் நிர்வாகம் கூறி வருகிறது. Hassett தெரிவிக்கையில், வரி விதிப்பால் அமெரிக்க நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் என தாம் நம்பவில்லை என்றார். சீனாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக அவர்கள் அமெரிக்காவிற்குள் பொருட்களைக் கொட்டுகிறார்கள் என்பதே உண்மை என Hassett விளக்கமளித்துள்ளார்.
மட்டுமின்றி, பங்குச் சந்தைகள் கதறுவதற்கு ட்ரம்பின் வரி விதிப்பே காரணம் என கூறுவதையும் Hassett நிராகரித்தார். ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்புகளால் அமெரிக்கர்களின் ஓய்வூதிய சேமிப்பு குறையக்கூடும் அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற அச்சங்களுக்கு கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தக்க பதிலடி அளித்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்ப் செழிப்புக்கான நீண்டகால பொருளாதார அடிப்படைகளை உருவாக்கி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பே இல்லை என உறுதிபட தெரிவித்துள்ள ஸ்காட் பெசென்ட், உண்மையில், பெரும்பாலான அமெரிக்கர்கள் பங்குச் சந்தைகளை நம்பி இல்லை என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |