ட்ரம்பினால் 1.5 லட்சம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க்! அடுத்து என்னவாகும்? நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பினால், உலகளவில் 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பு பில்லியன் கணக்கில் சரிந்துள்ளதால் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரும் இழப்பை சந்தித்த உலக பில்லியனர்கள்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி உலக பில்லியனர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதற்கு காரணம் டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்புதான் என தெரிய வந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி வெளியான அறிக்கையில், உலக பங்குச்சந்தை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அன்றைய தினம் 208 பில்லியன் டொலர்கள் அளவுக்கு முதலீட்டாளர்கள் இழப்பை எதிர்கொண்டனர்.
எச்சரிக்கும் நிபுணர்கள்
மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெஸோஸ் ஆகியோர் பாரிய அளவில் நிதியை இழந்திருக்கிறார்கள். 17.9 பில்லியன் டொலர்கள் (சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்) அளவிற்கு மார்க் ஜுக்கர்பெர்க் நிதியை இழந்திருக்கிறார்.
அதேபோல் ஜெஃப் பெஸோஸ் 15.9 பில்லியன் டொலர்கள் (சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய்) நிதியை இழந்துள்ளார்.
நிபுணர்களின் கணிப்பின்படி, இரண்டு நாட்களில் 500 பில்லியன் அளவுக்கு பணக்காரர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிலை நீடித்தால் அமெரிக்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
என்ன காரணம்?
சீனா வர்த்தக ரீதியில் எதிரி நாடு என்பதால், அந்நாட்டிற்கு ட்ரம்ப் வரி விதித்தில் பிரச்சனை இல்லை. ஆனால், அண்டை நாடான கனடாவுக்கும், நட்பு நாடுகளான இந்தியா, ஜப்பானுக்கும் ட்ரம்ப் வரி விதித்ததுதான் பிரச்சனை.
இதன் காரணமாக அமெரிக்கா மீது பல நாடுகளும் கோபத்தில் உள்ளன. இதற்கிடையில், சீனாவின் பதில் வரியால் அமெரிக்க பங்கு சந்தை ஆட்டம் கண்டுள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவின் ஒரு கிலோ ஆப்பிள் சீனாவில் 10 டொலருக்கு விற்கப்பட்டது. இப்போது சீனா 34 சதவீதம் பதில் வரி போட்டதால், அமெரிக்க ஆப்பிள் கிலோ 13.4 டொலராக உயரும். இதனால் சீன மக்கள் வேறு நாடுகளின் ஆப்பிளை வாங்க முற்படுவர். இது அமெரிக்க ஆப்பிள் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு துறையும் ட்ரம்பின் வரியால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. அதேபோல் அமெரிக்க பணக்காரர்களும் பேரிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |