ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ்
பறக்கும் தட்டு தொடர்பான கோப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டதைத் தொடர்ந்து, சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் திகிலூட்டும் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
பின்விளைவுகள்
சீன வம்சாவளி கனேடிய கல்வியாளரும் அரசியல் விமர்சகருமான Jiang Xueqin என்பவரே, ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ள பறக்கும் தட்டு தொடர்பான கோப்புகள் தொடர்பில், அட்டூழியங்களை எதிர்பாருங்கள் என எச்சரித்துள்ளார்.

2024ல் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றும், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக ஈரானுடன் அமெரிக்கா போர் தொடுக்கும் எனவும் அவர் கணித்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது, பறக்கும் தட்டு தொடர்பான கோப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டதன் விளைவுகள், வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கேள்விகளுக்கும் அப்பாற்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசாங்க ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள, விளக்க முடியாத காட்சிகளுக்குப் பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகக் கூறப்படும் கருத்தை ஜியாங் நிராகரித்துள்ளார்.
அது சுத்த முட்டாள்தனம் என்று அனைவருக்கும் தெரியும். வேற்றுகிரகவாசிகள் என்று யாரும் இல்லை; வேற்றுகிரக தொழில்நுட்பமும் இல்லை. அது ஒரு பிரமை. நீங்கள் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறீர்கள், அவ்வளவுதான் என ஜியாங் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, மக்கள் ஒன்றுக்கொன்று முரணான அச்சங்களையும் நம்பிக்கைகளையும் தழுவிக்கொள்வதால், சமூகம் மேலும் மேலும் பிளவுபட்டு வருவதாகவும் ஜியாங் வாதிட்டுள்ளார்.
சிலர் பறக்கும் தட்டுகள் மீது கவனம் செலுத்துகையில், மற்றவர்களோ செயற்கை நுண்ணறிவு, அரசாங்க சதித்திட்டங்கள் அல்லது அமானுஷ்ய சக்திகள் குறித்த கவலைகளில் மூழ்கிவிடுகின்றனர். மக்கள் தங்களின் தனி உலகிற்குள் சுருண்டு கொள்கிறார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் கொடூரங்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; அது மக்களை நிலைகுலையச் செய்துவிடும் என்று ஜியாங் எச்சரித்துள்ளார்.
திசை திருப்புகிறது
அடையாளம் காணப்படாத அசாதாரண நிகழ்வுகள் தொடர்பான, முன்னர் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த பதிவுகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வரும் வேளையில், அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
மே 8-ஆம் திகதி தொடங்கிய இந்தத் தகவல்களை வெளியிடும் முயற்சி, பல ஆண்டுகளாகப் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்த காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் உளவுத்துறை ஆவணங்களை உள்ளடக்கிய இரண்டு முக்கிய தொகுப்புகளை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் பல மாதங்களாக வெளியிடுமாறு பென்டகனிடம் வலியுறுத்தி வந்த 46 காணொளிகள், சமீபத்திய தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், பறக்கும் தட்டுகள் மீதான மோகம், மக்களை ஆழமான சமூகப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புகிறது என்று ஜியாங் நம்புகிறார்.

மேலும், மிகப்பெரிய ஆபத்து வேற்றுக்கிரகவாசிகள் அல்ல, மாறாக அச்சம், நிச்சயமின்மை மற்றும் அவநம்பிக்கையால் பெருகிவரும் ஒரு சமூகமே என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
மட்டுமின்றி, கடினமான யதார்த்தங்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மக்கள் ஆறுதல் தரும் கதைகளை நாடக்கூடும் என்றும், அது ஒட்டுமொத்த நாடுகளையே பலவீனப்படுத்தக்கூடிய பிளவுகளை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டுப் போர்களின் காரணமாகப் பேரரசுகள் வீழ்ச்சியடைவதையும், அவை சோர்வடைந்துவிடுவதையும் நாம் வரலாற்றில் முன்பே கண்டிருக்கிறோம் எனவும் ஜியாங் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |